ஶ்ரீவி: குளிர்ந்த காற்றுடன் மிதமான சாரல் மழை

1187பார்த்தது
ஶ்ரீவி: குளிர்ந்த காற்றுடன் மிதமான சாரல் மழை
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கிருஷ்ணன்கோவில், மல்லி, இந்திரா நகர், வன்னியம்பட்டி, மம்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெயிலுக்குப் பிறகு, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கிராமப்புறங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி