ஸ்ரீவி: சாலையில் மலை பாம்பு; மக்கள் அச்சம்

1288பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில், மா, தென்னை, கரும்பு, நெல் விவசாயம் பிரதானமாக நடைபெறுகிறது. எப்போதும் பசுமையாக காணப்படும் இப்பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி உலா வருவதுண்டு. இந்நிலையில், மம்சாபுரம் காவல் நிலையம் அருகே இரவு நேரத்தில் மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே ஊர்ந்து செல்வதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால், இரவு நேரங்களில் சாலையில் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி