ஸ்ரீவி: ஸ்ரீஆண்டாள் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் விழா....

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நம்மாழ்வார் மோட்ச விழா இன்று (ஜன. 10) அதிகாலை நடைபெற்றது. அதிகாலை 1:30 மணிக்கு மேல் வெள்ளி குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஆழ்வார்கள் எழுந்தருளினர். அரையர் அருளிப்பாட்டுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி