ஶ்ரீவி: நள்ளிரவு மழையால் மக்கள் மகிழ்ச்சி...

443பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் காலை வரை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக திடீரென மழை பெய்தது. பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை சில மாவட்டங்களில் பெய்யும் என தெரிவித்திருந்த நிலையில், இந்த மழை பொதுமக்களுக்கு இதமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி