ஸ்ரீவி: புதிய தரை பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தோப்பூர் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் மூன்று நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டனர். இதனால், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், வன்னியம்பட்டி காவல்துறையினர் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.