ஸ்ரீவி: சனி பிரதோஷ விழா; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

645பார்த்தது
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 14 ) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. வனத்துறையினர் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இரவில் தங்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர். விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி