ஶ்ரீவி: சிவராத்திரி விழா; சதுரகியில் குவிந்த பக்தர்கள்

1141பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விடிய விடிய நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டன. வனத்துறை, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி