விருதுநகர்: சிறுவன் உள்பட 4 பேரை கடித்துக் குதறிய தெருநாய்

79பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவன் உள்பட 4 பேரை கடித்துக் குதறிய தெருநாய். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஓட்டைமடம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 60). இவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தெருநாய் இவரது கையை கடித்துக் குதறியது. இதனால் இவரது வலது கையின் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கூச்சலிடவே, உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அந்த நாய் தெருவில் ஓடும்போது அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் மற்றும் 2 பேரை கடித்துவிட்டு ஓடியதாக தெரிகிறது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சுகாதாரத்துறையினர் நாயை பிடித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நகர் பகுதியில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிவதால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி