ஸ்ரீவி: பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுப்பட்ட மாணவர்கள்...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களை துப்புரவு பணிக்கு அமர்த்துவதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்கள் குப்பை அள்ள வைக்கப்பட்டதாகவும், சாப்பிடும் உணவில் புழுக்கள் கிடந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி