ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. விடுமுறை ஜூன் 14, 15 நாட்களான நேற்றும் இன்றும், இந்த கோவிலில் வழக்கத்தைக் காட்டிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பிற மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு இந்த வழியாகத் தான் செல்கின்றனர்.
இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக பால்கோவா விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வியாபாரம் குற்றாலச் சீசன் முடியும் வரை இருக்குமென்றும், அடுத்து தொடர்ச்சியாக ஆண்டாள் திருவிழா நடைபெற இருப்பதால், இன்னும் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர் பால்கோவா வியாபாரிகள்.