ஶ்ரீவி: பிளவக்கல் பெரியாறு அணை நாளை நவ. 17 திறப்பு...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 42 அடியாக உள்ளது. பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள கண்மாய்களுக்கு ஒரு வாரத்திற்கு வினாடிக்கு 150 கன அடி நீரும், பெரியார் கால்வாய் நீர்ப்பாசனத்திற்கு நவம்பர் 17, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரை வினாடிக்கு 3 கன அடி நீரும் திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி