ஶ்ரீவி: வேன் கண்மாயில் கவிழ்ந்து விபத்து;ஒருவர் பலி...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புது சென்னாகுளம் மாரியம்மாள் வீரலட்சுமி சண்முகத்தாய் வீரகாளி வேலம்மாள் தனமாரி வெங்கடேஸ்வரி ஆகியோர் வேலைக்குச் சென்றபோது, ராமலிங்கபுரம் - கோடாங்கி பட்டி சாலையில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 6 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you