ஶ்ரீவி: மின்சாரம் தாக்கி பெண் பலி

1016பார்த்தது
ஶ்ரீவி: மின்சாரம் தாக்கி பெண் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நல்லூர்பட்டியில், பலத்த காற்றுடன் மழை பெய்தபோது மின்சார கம்பி அறுந்து தகர செட் மீது விழுந்தது. இதை கவனிக்காமல், தகர செட்டில் காய வைத்திருந்த துணியை எடுக்க முயன்ற தங்கராணி (35) மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி