விருதுநகரில் திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், விருதுநகர் என்றால் நினைவுக்கு வருவது கர்மவீரர் காமராசர்.விருதுநகரில் மாநாடு நடந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி உறுதி. 2004இல் இங்கு நடந்த தென்மண்டல கூட்டத்திற்கு பின் 40க்கு 40 வெற்றி பெற்றோம். 2019 தேர்தல் பரப்புரை இங்கிருந்து தொடங்கி 39 தொகுதி வெற்றிப்பெற்றோம். இப்போ 2026 தேர்தலில் புதிய சாதனை படைக்க தயாரா. விருதுநகர் மக்கள் எப்போதும் பாசமும் நேசமும் தருபவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.