ராஜபாளையம் தம்பா பிள்ளை தெருவைச் சேர்ந்த கலைச்செல்வி (59) என்பவர் சனிக்கிழமை அன்று வீட்டில் சாமி கும்பிடும்போது சூடம் கொளுத்தியதில் அவரது சேலையில் தீப்பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.