மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த செந்தில்குமார் (31) என்ற கூலித்தொழிலாளி, சிவராத்திரி அன்று உறவினர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குலதெய்வ வழிபாட்டிற்காக வந்துள்ளார். திங்கள்கிழமை இரவு தெப்பக்குளத்தின் கரையில் நின்று செல்ஃபி எடுக்கும்போது தவறி நீரில் விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் மிதந்த நிலையில், உறவினர்கள் தகவல் அளித்ததை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.