
மாணவியின் ஆங்கிலத் திறனைப் பாராட்டிய அமைச்சர்
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, வரிசையூர் நடுநிலைப் பள்ளிக்குச் சென்று 8ஆம் வகுப்பு மாணவி புவனேஸ்வரியின் ஆங்கில வாசிப்புத் திறனைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டினார். மாணவி தன்னம்பிக்கையுடனும் தெளிவான உச்சரிப்புடனும் ஆங்கிலப் பாடத்தை வாசித்ததைக் கண்டு, அமைச்சர் அவரை மேலும் சிறப்பாகப் படிக்க ஊக்குவித்தார்.





















