வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டதாக

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் கீழ அழகிய நல்லூர் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் மற்றும் தேவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த சிலர் பட்டாசுகள் வெடித்துச் சென்றபோது, பேருந்து நிலையத்தில் இருந்த ஜோதி என்ற பெண் கண்ணில் காயம் அடைந்தார். இதற்கிடையில், தேவர் இன மக்கள் வழிபடும் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் அளந்து வைக்கப்பட்டிருந்த கற்களை தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த சிலர் உடைத்து தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தேவர் இனத்தைச் சார்ந்த 14 பேர் மீது தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த சிலர் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தேவர் இன மக்கள் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி