விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே, திருச்சுழி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் தலைமையில் அஇஅதிமுக- அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளரும், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சிவசாமி இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இதில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக கட்சி பொருளாளர் திலகபாமா, காரியாபட்டி ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.