கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, இனி ஆண்டுதோறும் குறள்வாரம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் திருக்குறள் கருத்துக்களைப் பரப்பும் நோக்கில், பொதுமக்கள் பங்கேற்கும் குறள்சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 13.01.2026 அன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றன. ஓவியப் போட்டிக்கு A4 தாள் பயன்படுத்த வேண்டும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், அன்றைய தினமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 9.00 முதல் 10.30 மணி வரையிலும், ஓவியப் போட்டிக்கு பிற்பகல் 1.30 முதல் 2.30 மணி வரையிலும் ஆதார் அல்லது குடும்ப அட்டை நகலுடன் பதிவு செய்யலாம்.