தேர்வுக்கு நடைமுறையை பின்படுத்த ஆட்சியர் அறிவுரை

321பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II முதன்மை எழுத்துத் தேர்வு வரும் பிப்ரவரி 8, 2026 அன்று நடைபெறுகிறது. கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்தத் தேர்வில் மொத்தம் 459 பேர் பங்கேற்க உள்ளனர். முற்பகல் தேர்வுக்கு காலை 8:30 மணிக்கும், பிற்பகல் தேர்வுக்கு பிற்பகல் 1:30 மணிக்கும் தேர்வு கூடத்திற்கு வர வேண்டும். காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் மதியம் 12:30 மணிக்கும், பிற்பகல் தேர்வில் மாலை 5 மணிக்கும் முன்பாக வெளியேற முடியாது.

தொடர்புடைய செய்தி