தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து அவர் கேட்டறிந்தார்.