திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

459பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், சாத்தூர் நகர திமுக சார்பில், நான்கரை ஆண்டு கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் அண்ணா திடலில் நடைபெற்றது. நகரப் பொருளாளர் நாகராஜன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு பேரவை துணை அமைப்பாளர் ஞானசேகரன், நகர் மன்ற உறுப்பினர் பூ மாரிமுத்து, ஒன்பதாவது வார்டு செயலாளர் இசக்கி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தேர்தல் பணி குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் சாதனை விளக்க உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் நிர்மலா கடற்கரை ராஜ், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி