விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் விருதுநகர் திமுக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், வருகின்ற நான்காம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும், வாக்காளர் சீரமைப்பு பணி சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.