அரசு தேர்வுக்கான இலவச பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது

0பார்த்தது
விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள தோழர் ஜே. ஹேமச்சந்திரன் நினைவகத்தில், சிஐடியு மற்றும் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 30 முதல் தொடங்குகின்றன. மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி இந்த பயிற்சி வகுப்புகளை துவக்கி வைக்க உள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசுப் பணிகளைப் பெற்றுத் தந்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சிகளை வழங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி