15 ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு பேருந்து

3பார்த்தது
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காரியாபட்டி வழியாக வையம்பட்டி கிராமத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான தங்கம் தென்னரசுவின் முயற்சியால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காரியாபட்டி வழியாக பாம்பாட்டி வரை வந்த பேருந்து, கூடுதலாக வையம்பட்டியிலிருந்தும் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமமின்றி பயணிக்க முடியும். பேருந்து வசதி மீண்டும் கிடைத்ததால் வையம்பட்டி மற்றும் பாஞ்சார் கிராம மக்கள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றி தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டேக்ஸ் :