விருதுநகர்: ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்

585பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரசூரையா, தருணவிநாயகர், அரிய நாச்சியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 450க்கும் மேற்பட்ட காளைகளும், 200க்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்களும் பங்கேற்றனர். வருவாய் கோட்டாட்சியர் மாரிமுத்து போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரை மணி நேரத்திற்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் பிற்பகல் வரை போட்டி நீடித்தது. போட்டியில் பல காளைகள் வீரர்களை தூக்கி வீசி சவால் விடுத்தன.

தொடர்புடைய செய்தி