ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி..வீடியோ

636பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் நல திருமால் வகையறா சார்பில் அருள்மிகு ஸ்ரீ பெரிய கருப்பண்ணசாமி மற்றும் ஸ்ரீ அழகியபெருமாள் திருக்கோயில் பொங்கல் உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட சுமார் 600 காளைகளும், சுமார் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்ற முறையில், ஒவ்வொரு சுற்றிலும் 25 வீரர்கள் களம் இறக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி