விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமலிங்கபுரம் சௌடாம்பிகை அம்மன் கோயில் வைகாசி திருவிழாவில், கரக உற்சவ விழாவும் கத்தி போடும் விழாவும் நடைபெற்றது. ஊர் எல்லையிலிருந்து ஊர்வலமாக கரகம் எடுத்து வரப்பட்டபோது, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பின்னோக்கி நடந்தபடி கத்தியால் மார்பு மற்றும் முதுகுகளில் அடித்துக்கொண்டு 'ஓம் சக்தி பராசக்தி' எனக்கூறி நேர்த்திக்கடன் செலுத்தினர். இது நூதன முறையில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஒரு நிகழ்வாக அமைந்தது.