எம் சண்ட கடத்திய லாரி பறிமுதல்

2பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி கனிம வளங்கள் டாரஸ் லாரிகளில் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. புலியூரான் மற்றும் மேலக் கண்டமங்கலம் பகுதிகளில் எம். சாண்ட் மற்றும் உடைகல் ஏற்றி வந்த இரண்டு டாரஸ் லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். உரிய அனுமதிச் சீட்டு இன்றி கனிம வளங்கள் கடத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து, லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி