காரியாபட்டி: மருத்துவமனைக்கு சென்றவர் மயங்கி விழுந்து பலி

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பாக உள்ள பிச்சை என்ற வைத்தியர் கடையில் வைத்தியம் பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லப்பன் என்பவர் அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. இது குறித்து மல்லப்பனின் மகன் கார்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த கார்த்திக் தந்தை பார்த்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரி காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி