விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் பெ. புதுப்பட்டி - நமச்சிவாயபுரம் இடையே ரூ. 753. 67 இலட்சம் மதிப்பிலும், மாந்தோப்பு - வையம்பட்டி இடையே ரூ. 813. 90 இலட்சம் மதிப்பிலும் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி பணியின் திட்ட இயக்குநர் கேசவதாசன், துறை சார் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.