விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 31.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.