தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தான் படித்த மல்லாங்கிணறு அரசு மேல்நிலை பள்ளியின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10,000 பனை விதைகள் மற்றும் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை அவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மல்லாங்கிணற்றை பசுமையாக்கி, நீர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கிலும், தமிழ்நாட்டின் மரபு மற்றும் பண்பாட்டை வெளிக்கொணரும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சருக்கு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.