பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த அமைச்சர்

2பார்த்தது
காரியாபட்டி அருகே மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சேது பொறியியல் கல்லூரியில் பயிலும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மழைக்காலங்களில் சிரமம் அடைந்து வந்தனர். இதனையடுத்து, தொகுதி எம்.எல்.ஏவும், தமிழ்நாடு நிதியமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் பயணியர் நிழற்குடை கட்டித் தர வேண்டும் என மாணவ, மாணவியர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இதனை இன்று தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவ, மாணவியர்களை வைத்து திறந்து வைத்தார். கல்லூரி நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி