வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை அமைச்சர் வழங்கினார்

3பார்த்தது
வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை அமைச்சர் வழங்கினார்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 302 பயனாளிகளுக்கு ரூ. 10.56 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு வழங்கினார். 2030-க்குள் தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், கிராமப்புற ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை வழங்கும் தமிழக அரசின் திட்டமே கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஆகும்.

தொடர்புடைய செய்தி