திருச்சுழியில் நீண்டகாலமாக மக்களால் கோரப்பட்டு வந்த பேருந்து நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த தொகுதியில், சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்பயிற்சி நிலையம், சமூக சுகாதாரக் கூடங்கள், மகளிர் காவல் நிலையங்கள் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது இப்பகுதியின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது.