கட்டுமான பணியை தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

2பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நமது முதலமைச்சர் கடந்த நான்கு ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் கிராமப் பகுதிகளில் கட்டமைப்புகளை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளார் என்று தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய சார் பதிவாளர் அலுவலகத்தின் பெருமையை உணர்த்திய அவர், திருச்சுழியின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், அரசு கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பேருந்து நிலையம் வந்துள்ளதாகவும், விரைவில் முதலமைச்சர் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்றும் கூறினார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், தகுதி இருந்தும் விடுபட்ட மகளிருக்கும் விரைவில் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you