தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

219பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அகத்தாகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டிரைடெண்ட் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கல்குவாரிகளுக்கு தேவையான வெடிமருந்து பொருட்கள் தயாரிக்கும் இந்த நிறுவனம், கேரள கனிம வள கொள்ளை மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி