விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. இந்த போட்டி கிராம மக்களின் உற்சாகத்துடன் நடைபெற்றது.