திருச்சுழி: மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் கிராம மக்கள் அச்சம்

648பார்த்தது
திருச்சுழி அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் தாழ்வாக செல்லும் மின்சார வயர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். விவசாய விளை நிலங்களுக்குச் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள மின்சார வயர்கள் மிகவும் தாழ்வாக செல்வதால், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடனடியாக மின்சார வயர்களைச் சரிசெய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி