காரியாபட்டி என். ஜி. ஓ நகர், சம்பங்கி தெருவில் உள்ள ஒரு வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டின் கதவு மற்றும் பீரோ லாக்கரை உடைத்து, சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். காரியாபட்டி காவல்துறையினர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகள் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.