விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் இயற்கை குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். இதனால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சந்தை பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனையாளர்கள் நுங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். மதியம் மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிக அளவில் நுங்கு வாங்கிச் செல்வதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.