சம்பூர்ணதா அபியான் முழு நிறைவு 2. 0 திட்டத்தினை தொடக்கம்

345பார்த்தது
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டாரத்தில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் சம்பூர்ணதா அபியான் முழு நிறைவு 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் இயக்குநர் டி. நளினா சோபியா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு. என். சுகபுத்ரா இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் சுகாதாரம், ஊட்டச்சத்து, வேளாண்மை, கல்வி போன்ற துறைகளில் இலக்குகளை அடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்கள் பங்களிப்பை ஊக்குவிக்கவும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி