சாத்தூர்: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

1185பார்த்தது
சாத்தூர்: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள உடைய அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய விக்னேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். பூசாரி உதயராஜ் (30) கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போனதை கண்டு வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், துலுக்கன்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற விக்னேஷ் பிடிபட்டார். பணம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி