சாத்தூர்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது..

2பார்த்தது
சாத்தூர்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேல காந்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆத்துப்பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நந்தகோபால் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. தாயில்பட்டி பச்சையாபுரத்தைச் சேர்ந்த நந்தகோபால் (40) என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி