விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இன்று காரியாபட்டி அருகே தோப்பூர், கழுவனச்சேரி கிராமங்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட ஏழு பேரை தெருநாய் கடித்து படுகாயப்படுத்தியது. பாதிக்கப்பட்ட 7 பேரும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த 4 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் தெருநாய் கடியால் ரேபீஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.