விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, புலிக்குறிச்சி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி பள்ளி மாணவ, மாணவியர் அவரைச் சந்தித்து, தங்கள் பகுதியில் உயர்நிலைப் பள்ளி கட்டித்தரக் கோரிக்கை விடுத்தனர். தற்போது நடுநிலைப் பள்ளி மட்டுமே உள்ளதால், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்க மாணவர்கள் திருச்சுழி வரை தினசரி பயணம் செய்ய வேண்டியுள்ளது. இது மிகுந்த சிரமத்தை அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த தங்கம் தென்னரசு, இது குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.