திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருக்கார்த்திகை மகா தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு நடந்தது. பக்தர்கள் சொக்கப்பனை அக்னி லிங்கமாக வணங்கி, அதிலிருந்து கிடைக்கும் கரியை திருநீறாக பூசிக்கொண்டனர். இந்த சாம்பலை விளைநிலங்களில் தூவினால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. பனை மரத்தைப் போல பிறருக்கு உதவியாக வாழ்ந்தால் முக்தி கிடைக்கும் என்பதையும் இது உணர்த்துகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.