திருச்சுழி: அமைச்சர் அதிரடி; 23 குவாரிகள் மூட உத்தரவு

1264பார்த்தது
திருச்சுழி: அமைச்சர் அதிரடி; 23 குவாரிகள் மூட உத்தரவு
திருச்சுழி அருகே அரசு அனுமதி பெறாமலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எம்.சாண்ட், கற்கள், மணல் உள்ளிட்ட தளவாட பொருட்களை அதிக எடையுடன் கொண்டு செல்வதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இது குறித்து கனிம வள துறை அமைச்சர் பிரபு திருச்சுழியில் உள்ள குவாரியை ஆய்வு செய்தார். குவாரி ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்து, முறையான அனுமதி உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். இதன் அடிப்படையில், மாவட்டத்தில் 23 குவாரிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி